கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோயிலில் பங்குனித் திருவிழா கடந்த 5ஆம் தேதி கொடியேற்றதுடன் தொடங்கியது. திருவிழா நடைபெறும் நாட்களில் தினமும் ஒவ்வொரு சமுதாயதினர் சார்பில் சிறப்பு பூஜை நடைபெற்றன. 9 ஆவது நாளில் கம்மவார் சங்கம் சார்பில் தேரோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.நேற்று தீர்த்த விழா நடைபெற்றத்ததையடுத்து , அதிகாலை 1 மணிஅளவில் கோயில் நடை திறக்கப்பட்டது. பக்தர்கள் அம்மனை வழிபட திரண்டனர்.
மேலும், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை ஆகிய பூஜைகளை நடைப்பெற்றதை அடுத்து உற்சவர், சுவாமி, அம்பாளுக்கு அபிஷகம் செய்து , அம்பாளுக்கு மஞ்சள் குத்தி தீர்த்த திருக்குளத்திற்கு செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து மாலையில் தீபாராதனை சடங்கும் , இரவில் அம்மனுக்கு யானை மற்றும் அன்ன வாகனத்தில் வீ தியுலாவும்,சாமத்தில் அம்மனுக்கு ரிஷப வாகனத்தில் வீதியுலா சடங்குகளும் முடிந்தது. இதையடுத்து, திங்கள் இன்று இரவு 7 மணிக்கு தெப்ப உற்சவம் நடைபெற இருக்கிறது.