நாகப்பட்டினம் மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக செல்வநாகரத்தினம் கடந்த 7ஆம் தேதியன்று பொறுப்பேற்றுக்கொண்டார். இவர் வாரநாட்களில் புகார் அளிக்க வரும் பொதுமக்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தின் முதல் தளத்தில் உள்ள அவரது அறையில் சந்தித்து வருகிறார்.
இந்நிலையில், அலுவலகத்திற்கு புகார் கொடுக்க வரும் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், கைக்குழந்தைகளுடன் வரும் பெண்கள், முதல் தளத்திற்காக படிகள் ஏறி வரவேண்டாம் எனவும், தானே கீழே இறங்கி வந்து புகார்களை பெற்றுக்கொள்வதாக அறிவிப்பு பலகை வைத்துள்ளார். அதன்படி, அவர் நேரடியாக கீழ் தளத்திற்கு வந்து, பொதுமக்கள் வரவேற்பு அறையில் புகார்களை பெறுகிறார். இந்த மனிதநேயமிக்க செயல் பொதுமக்கள் மத்தியில் பலராலும் பாராட்டப்பட்டு பெற்று வருகிறது.