Categories
இந்திய சினிமா சினிமா டிரெய்லர் தமிழ் சினிமா

கே.ராமசந்திரன் ’நா கோஷம்…ஜானு கோஷம்’….வெளியான ‘ஜானு’ ட்ரெய்லர்!

’96’ படத்தின் தெலுங்கு வெர்ஷனான ஜானு படத்தின் ட்ரெய்லரை படக்குழு நேற்று வெளியிட்டுள்ளது.

விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் 2018ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற படம் ’96’. இத்திரைப்படத்தை ஒளிப்பதிவாளர் பிரேம்குமார் இயக்கியிருந்தார். ஒளிப்பதிவாளராக பணிபுரிந்திருந்தாலும் பிரேம்குமார் ’96’ திரைப்படத்தில்தான் இயக்குநராக அறிமுகமானார். திரைப்படம் வெளியான பிறகு கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

இதைத்தொடர்ந்து இப்படம் கன்னடத்தில் ’99’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. அதில் பாவனாவும், கணேஷும் நடித்திருந்தனர். இப்போது தெலுங்கில், த்ரிஷா கதாபாத்திரத்தில் சமந்தாவும், விஜய் சேதுபதி பாத்திரத்தில் ஷ்ரவானந்தும் நடித்துள்ளனர். தெலுங்கிலும் பிரேம் குமாரே இயக்கியுள்ளார்.

Image result for The film crew has now released the trailer of '96' Telugu version of Janu.

தமிழில் த்ரிஷாவின் கதாபாத்திரத்தின் பெயரான ஜானு என்ற பெயரையே இப்படத்திற்கு சூட்டியுள்ளனர். ’96’ படத்திற்கு இசையமைத்த கோவிந்த் வசந்தா, இதற்கும் இசையமைக்கிறார். தில் ராஜு படத்தை தயரித்துள்ளார். இந்நிலையில் நேற்று இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. வெளியான சிலநிமிடங்களிலேயே இந்த ட்ரெய்லர் தெலுங்கு ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. பிப்ரவரி 7ஆம் தேதி திரைக்கு வர உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளனர்.

Categories

Tech |