நடிகர் மம்மூட்டி, ராஜ்கிரண், மீனா ஆகியோர் நடிப்பில் தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் உருவாகிவரும் திரைப்படம் ‘குபேரன்’. இந்த படத்தின் மூலம் மலையாள திரையுலகில் முதன் முறையாக அடியெடுத்து வைத்துள்ளார் நடிகர் ராஜ்கிரண். இந்த படத்தின் ஃபஸ்ட் லுக் தற்போது வெளியாகியுள்ள நிலையில், படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
ஏற்கனவே மம்மூட்டியை வைத்து மலையாளத்தில் ராஜாதி ராஜா மற்றும் மாஸ்டர் பீஸ் என 2 ஹிட் படங்களை கொடுத்த பிரபல மலையாள இயக்குனர் அஜய் வாசுதேவ் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். இந்தப்படத்திற்கு மலையாளத்தில் ஷைலாக் (Shylock) என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் தமிழ் உரிமையை ராஜ்கிரணின் ரெட் சன் ஆர்ட் கிரேஷன்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. இந்த நிறுவனம் ராசாவே உன்னை நம்பி, என்ன பெத்த ராசா, என் ராசாவின் மனசிலே, அரண்மனைக்கிளி, எல்லாமே என் ராசாதான் ஆகிய வெள்ளி விழா படங்களை வெளியிட்டு இருக்கிறது.