Categories
சினிமா தமிழ் சினிமா

‘அப்புறம் என்ன மயிருக்கு… “கைதி”யை விமர்சனம் செய்த இளைஞர்… சாட்டையடி பதில் கொடுத்த தயாரிப்பாளர்..!!

கைதி திரைப்படம் பற்றி மோசமான கருத்துகளைத் தெரிவித்த இளைஞருக்கு அவரது பாணியிலேயே அப்படத்தின் தயாரிப்பாளர் பதிலடி கொடுத்துள்ளார்.

நடிகர் கார்த்தி-இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் இன்று திரைக்கு வந்துள்ள படம் கைதி. நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்துவரும் கார்த்தி இந்த முறை கைதியாக நடித்திருக்கிறார். இந்தப் படம் தீபாவளியை முன்னிட்டு இன்று வெளியானது. மாநகரம் திரைப்படத்தைத் தொடந்து லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த திரைப்படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது. இந்தப் படத்தில் நடிகர்கள் நரேன், ஜார்ஜ் மரியான், யோகி பாபு உள்ளிட்ட பிரபலங்களும் நடித்துள்ளனர். சாம் சி.எஸ் இசையமைத்துள்ள இப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.
Image result for கைதி

முன்னதாக விஜய் நடிப்பில் பிகில் திரைப்படமும் இன்று வெளியாகியுள்ள நிலையில், இரு படங்களுக்குமே அந்தந்த ரசிகர்கள் போட்டி போட்டுக்கொண்டு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அதிகாலை முதலே திரையரங்குகளில் ரசிகர்கள் குவிந்தவண்ணம் உள்ளனர். இதனிடையே கைதி பட தயாரிப்பாளர்களில் ஒருவரான எஸ்.ஆர். பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில், ‘கைதி நீங்கள் எதிர்பார்க்கும் அனைத்து பொழுதுபோக்கு அம்சங்களையும் கொடுக்கும்’ என பதிவிட்டிருந்தார்.

Image result for கைதி
இதற்கு ட்விட்டர் வாடிக்கையாளர் ஒருவர் ‘அப்படியெல்லாம் ஒரு ம**ம் இல்ல’ என தகாத வார்த்தையைப் பயன்படுத்தி தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபுவின் பக்கத்தில் பதிலிட்டிருந்தார்.
இதற்கு மறுபதிவு செய்துள்ள எஸ்.ஆர். பிரபு, ‘அப்புறம் என்ன மயிருக்கு  என் டைம்லைன்ல கமெண்ட் பண்ணுறீங்க ப்ரோ? ‘ என அவரது பாணியிலேயே பதிலடி கொடுத்திருக்கிறார். இந்தப் பதிவுக்கு பலரும் பல்வேறு விதமான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இதனையடுத்து, அந்த இளைஞர் அவரது ட்விட்டர் கணக்கை யாரும் பார்க்காதபடி தற்காலிகமாக முடக்கிவைத்துள்ளார்.

Categories

Tech |