அமெரிக்காவில் ஒருவர் தான் வளர்த்து வந்த பூனையின் அஸ்தியை விண்வெளிக்கு அனுப்பி வைத்து பிரமாண்ட இறுதிசடங்கு நடத்தவுள்ளார்.
உலகில் பலரும் செல்லப்பிராணிகளான நாய், பூனையை தங்கள் குடும்பத்தில் ஒருவராக வளர்த்து அதன் மீது அளவு கடந்த அன்பை காட்டி மகிழ்வர். இந்நிலையில் திடீரென செல்லப் பிராணியான ஏதேனும் ஓன்று இறந்து விட்டால் அவர்கள் சோகத்திலும் மனதளவிலும் சோர்ந்து போய் விடுகிறார்கள். சிலர் கண்ணீர் விட்டு அழுது அதனை மரியாதையுடன் மனிதனுக்கு செய்வது போல் மரியாதையுடன் அடக்கம் செய்வார்கள்.
இப்படி இருக்கும் நிலையில் அமெரிக்காவின் ஓரேகான் பகுதியை சேர்ந்த ஸ்டன்ட் மன்ட்(stunt munt) என்பவர் ‘பிக்காச்சு’ என்று பெயரிட்டு ஒரு பூனை ஒன்றை பாசத்துடன் வளர்த்து வந்தார். இந்த பூனை கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் உயிரிழந்தது. இந்நிலையில், அன்பின் காரணமா இறந்த பூனையின் அஸ்தியை விண்வெளிக்கு அனுப்பி வைத்து பிரமாண்ட இறுதி சடங்கு நடத்த முடிவெடுத்தார்.
இதற்காக பலரிடம் நிதி திரட்டிய ஸ்டன்ட் மன்ட் , தான் சேமித்து வைத்திருந்த பணத்தையும் சேர்த்து, பூனையின் அஸ்தியை விண்வெளிக்கு அனுப்புவதற்காக 3 1/2 லட்சத்துக்கு ‘செலஸ்டிஸ் பெட்ஸ்’ (Celestis Pets) நிறுவனத்திடம் டிக்கெட் வாங்கியுள்ளார்.