சென்னை எம்ஜிஆர் நகர் சோழன் தெருவைச் சேர்ந்தவர் கண்ணன்-உஷாதம்பதியினர். இவருகளுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
கடந்த 15ஆம் தேதி உஷா, வழக்கம் போல வீட்டில் சமைத்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென்று எதிர்பாராத விதமாக அவரது புடவையில் தீப்பற்றி உள்ளது.
பற்றிய தீ , வேகமாக பரவ தொடங்கியது. அவரின் கூச்சல் சத்தம் கேட்டு அருகில் உள்ளவர்கள் ஓடிவந்து உடனே தீயை அணைக்க முயன்றனர்.
இருப்பினும் அந்தப் பெண்ணின் உடல் முழுவதும் தீ பரவியுள்ளது. விபத்து குறித்து தகவலறிந்த காவல்துறையினர், தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்தில் படுகாயங்களுடன் கிடந்த உஷாவை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.
தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சைப்பெற்று வந்த உஷா, இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த தீவிபத்து குறித்து எம்ஜிஆர் நகர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.