வீட்டுக்குள் பதுங்கியிருந்த சுமார் 5 அடி நீளம் கொண்ட பாம்பை தீயணைப்பு வீரர்கள் லாவகமாக பிடித்து ஊருக்கு வெளியிலுள்ள கண்மாய் பகுதியில் விட்டனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இருக்கும் காந்திநகர் பகுதியில் வசித்து வருபவர் புவனேஸ்வரன் என்பவரது வீட்டுக்குள் சுமார் 5 அடி நீளம் கொண்ட பாம்பு ஒன்று புகுந்தது.. வீட்டுக்குள் பாம்பு புகுந்ததை பார்த்து புவனேஸ்வரன் அலற, அவரது குடும்பத்தினரும் அதனைப் பார்த்து பயந்து போய் உடனே ஸ்ரீவில்லிபுத்தூர் தீயணைப்பு துறைக்கு போன் மூலம் தகவல் கொடுத்தனர்.
அதனைத்தொடர்ந்து ஸ்ரீவில்லிபுத்தூர் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று வீட்டுக்குள் பதுங்கி கிடந்த சுமார் 5 அடி நீளம் கொண்ட பாம்பை லாவகமாக பிடித்து ஊருக்கு வெளியிலுள்ள கண்மாய் பகுதியில் விட்டனர்.
அதேபோல் ஸ்ரீவில்லிபுத்தூர் தன்யா நகர் பகுதியிலுள்ள ஒரு வீட்டுக்குள் பாம்பு ஒன்று புகுந்தது. இதனைப் பார்த்து அச்சமடைந்த குடும்பத்தினர் ஸ்ரீவில்லிபுத்தூர் தீயணைப்புத்துறைக்கு தகவல் அளித்தனர். ஸ்ரீவில்லிபுத்தூர் தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து வீட்டுக்குள் பதுங்கியிருந்த பச்சை பாம்பை லாவகமாக பிடித்து கண்மாய் பகுதியில் விட்டனர்.