Categories
திருவண்ணாமலை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

திருவண்ணாமலையில் கொரோனாவுக்கு முதல் பலி… தமிழகத்தில் உயிரிழப்புகள் 34 ஆக உயர்ந்தது..!

திருவண்ணாமலையில் முதல் முறையாக கொரோனா பாதிப்புக்கு ஒருவர் இன்று பலியாகியுள்ளார்.

ஆரணியைச் சேர்ந்த 55 வயது பெண் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். திருவண்ணாமலையில் கொரோனாவால் இதுவரை 25 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார். இதுவரை திருவண்ணாமலையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற 10 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இன்று ஒருவர் உயிரிழந்ததன் காரணமாக தமிழகத்தில் மொத்த உயிரிழப்புகள் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 508 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து மொத்தம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4,058 ஆக அதிகரித்துள்ளது. மேலும், நேற்று ஒரே நாளில் 76 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இதையடுத்து மொத்தம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,485 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 20 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. கோயம்பேடு சந்தை தொடர்பால் அதிக பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது என சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 279 பேர், கடலூரில் 68 பேர், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சியில் தலா 38 பேர், விழுப்புரத்தில் 25 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று சென்னையை சேர்ந்த 56 வயது ஆண், 60 வயது பெண் உயிரிழந்ததையடுத்து, தமிழகத்தில் மொத்த பலி எண்ணிக்கை 33 ஆக அதிகரித்திருந்தது. இந்த நிலையில், இன்று திருவண்ணாமலையில் முதல் உயிரிழப்பு பதிவாகியுள்ளது. இதையடுத்து மொத்த உயிரிழப்புகள் 34 ஆக பதிவாகியுள்ளது.

Categories

Tech |