Categories
உலக செய்திகள்

12 முதல் 17 வயதினருக்கு… முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி… பிரபல நாட்டில் முக்கிய அறிவிப்பு..!!

அடுத்த வாரம் 12 முதல் 17 வயதினருக்கு முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று தென்னாப்பிரிக்காவில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தென்ஆப்பிரிக்காவில் வருகின்ற டிசம்பர் மாதத்திற்குள் கொரோனா தடுப்பூசிகளை 70% மக்களுக்கு செலுத்த வேண்டும் என்று அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. அந்த வகையில் அடுத்த வாரம் 12 முதல் 17 வயதினருக்கு பைசர் முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று தென்னாப்பிரிக்காவில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மேலும் சுகாதாரத்துறை தரப்பில் 12 முதல் 17 வயதினரின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அவர்களுக்கு இரண்டாவது டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே உலக சுகாதார அமைச்சகம் கொரோனா தடுப்பூசி குறைவாக போடப்பட்டுள்ள நாடுகளில் இறப்பு விகிதம் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது.

Categories

Tech |