Categories
கிரிக்கெட் விளையாட்டு

மும்பை vs சென்னை முதல் போட்டி : கடைபிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகள் என்னென்ன?

ஐபிஎல் தொடரில் இன்று மும்பை – சென்னை அணிகள் மோதும் முதல் லீக் போட்டி கொரோனா முன்னெச்சரிக்கை கட்டுப்பாடுகளுடன்  நடைபெறுகிறது.

உலகம் முழுவதும் கொரோனா ஏற்படுத்திய பெரும் தாக்கத்திற்கு மத்தியில் தற்போது 5 மாதங்களுக்குப் பின்னர் கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு இடையே ஐபிஎல் கிரிக்கெட் தொடர் பல்வேறு கட்டுப்பாடுகளுடனும், நெறிமுறைகளுடனும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கிறது.. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளுக்கும் பல்வேறுவிதமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன அதனை முழுவதுமாக இந்தப் பதிவில் காண்போம்.

13ஆவது ஐபிஎல் தொடர் இந்தியாவிலிருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டதையடுத்து 8 அணிகளையும் இந்தியாவில் தனிமைப்படுத்தி அவர்களுக்கான கொரோனா பரிசோதனையை செய்து ஐக்கிய அரபு அமீரகம் அனுப்பப்பட்டனர்.. பின்னர் இங்கு (யுஏஇ) வந்து 6 நாட்கள் தனிமைப்படுத்துதல் அதன் பிறகு பரிசோதனை என அடுத்த கட்ட நடவடிக்கைகளை தீவிரமாக செய்தது ஐபிஎல் நிர்வாகம்.. அதனைத்தொடர்ந்து ஆட்கள் இல்லாத மைதானங்களில் வீரர்கள் பயிற்சி செய்வதற்கு ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து தற்போது தொடங்கும் ஐபிஎல் தொடருக்கு முன்னர் நடைபெற்ற பரிசோதனை முடிவடைந்து தற்போது 8 அணிகளும் இந்ததொடரில் பங்கு பெற ஆயத்தமாகி வருகின்றன. வழக்கமாக ஐபிஎல் என்றாலே ரசிகர்களின் கூட்டம் நிரம்பி வழிந்து ஆரவாரம் என மைதானமே அமர்க்களமாக காட்சியளிக்கும்.. ஆனால் இந்தமுறை கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதன் காரணமாக முதல் கட்டுப்பாடாக மைதானத்தில் ரசிகர்கள் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.. ரசிகர்கள் இல்லாமல் முதல் முறையாக நடைபெறும் தொடராக இந்ததொடர் பார்க்கப்படுகிறது.

மேலும் போட்டியின்போது பவுண்டரி, சிக்ஸர் மற்றும் விக்கெட் எடுத்தால் “சியர் லீடர்ஸ்” என்று அழைக்கப்படும் நடன அழகிகள் டான்ஸ் ஆடுவார்கள்.. ஆனால் இந்தமுறை இந்த நடனத்தை பார்க்க முடியாது.. கொரோனா தொற்று பரவாமல் இருப்பதற்கு வீரர்களுக்கும் பல்வேறு விதமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருக்கின்றன.. அதாவது மைதானத்திற்கு உள்ளே நுழையும் வரை ஒவ்வொரு வீரரும் ‘மாஸ்க்’ கட்டாயம் அணிந்து இருக்க வேண்டும்.. அதேபோல டாஸ் போடும் போதும், முடிந்த பிறகும் இரு அணி கேப்டன்கள் ஒருவருக்கொருவர் கை குலுக்குவதை தவிர்க்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் போட்டிக்கு நடுவே கூல்ட்ரிங்ஸ், தண்ணீர் பாட்டில், துண்டு, பேட், கிளவுஸ் என எந்த வகை உபகரணங்களை எடுத்து வந்தாலும் சரி, எடுத்து வரும் வீரர்கள் கைகளில் கட்டாயம் கிருமி நாசினி (சானிடைசர்) கொண்டு சுத்தம் செய்த பின்னர் தான் அவற்றை எடுத்து வர வேண்டும். மேலும் களத்தில் உள்ள வீரர்களும் அதனை வாங்கும் முன்னதாக கைகளை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்த பின்பு அதனை வாங்க வேண்டும் என்ற பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இன்று தொடங்கி நவம்பர் 10ஆம் தேதி வரை நடக்கும் இந்த ஐபிஎல் தொடரில் நோய் தொற்று ஏற்படாமல் இருக்க இந்த விதிமுறைகள் அனைத்துமே கட்டாயம் பின்பற்றப்படும் என்று சொல்லப்படுகிறது.

லீக் சுற்று போட்டிகள் அனைத்தும் முடிந்தவுடன் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் 4 அணிகள் அடுத்த கட்டத்திற்கு செல்லும்.. ரசிகர்களின் பெரிய எதிர்பார்ப்புக்கு இடையே ஆரம்பிக்க இருக்கும் இந்த தொடர் ரசிகர்கள் இல்லாமல் எப்படி நடைபெறப்போகிறது என்பதை நாம் இன்று பார்ப்போம்.. அபுதாபியில் இன்று நடைபெறும் முதல் போட்டியில் சென்னை – மும்பை அணிகள் இந்திய நேரப்படி இரவு 7: 30 மணிக்கு மோதவுள்ளது  குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |