விஜய் தொலைக்காட்சியின் பிக்பாஸ் 5 இல் இன்றைய எபிசோடின் புரோமோ வெளியாகியுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் தற்போது மக்களிடையே மிகவும் பிரபலமாக ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சி பிக் பாஸ் சீசன் 5. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பல போட்டியாளர்கள் மக்களுக்கு தெரிந்த முகங்களாக இல்லை. அதில் ஒருவரான நமிதா மாரிமுத்து சக போட்டியாளரான தாமரையுடன் சண்டையிட்டு வீட்டில் இருந்த பொருட்களை எல்லாம் தூக்கி எரிந்ததால் அவருக்கு ரெட் கார்ட் கொடுத்து வெளியேற்றப்பட்டதாக தகவல் வெளிவந்தது.
இதனையடுத்து, இந்த வீட்டை விட்டு அடுத்தது யார் வெளியேறுவார்கள் என்பது இந்த வாரத்தில் தெரியவரும். இந்நிலையில், இன்று வெளியான ப்ரோமோவில் போட்டியாளர்கள் அனைவரும் யார் வெளியேற வேண்டும் என்று நாமினேட் செய்தனர். அதில் நதியா, நிரூப், இசைவாணி, பிரியங்கா, அபிஷேக்,அக்ஷரா இவர்களின் பெயர்கள் நாமினேட் ஆகியது.
https://www.instagram.com/p/CU34xyjtGoN/