மெக்சிகோவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு முதல் நபர் மரணமடைந்தார்.
சீனாவின் ஹூபேய் மாகாணம் வூஹான் நகரில் ஆட்டத்தை தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகின் 170-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி அச்சுறுத்தி வருகின்றது. இந்த கொடிய கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உலகம் முழுவதும் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். மேலும், 2 லட்சத்து 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகையே ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரஸ் அமெரிக்காவிலும் வேகமாக பரவி வருகின்றது. அந்நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் பரவியுள்ள வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 155 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 9 ஆயிரத்து 464 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது.
இந்நிலையில் அமெரிக்காவின் அண்டை நாடான மெக்சிகோவிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகின்றது. அந்நாட்டில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு முதல் நபர் இன்று மரணமடைந்துள்ளார். மேலும், 118 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.