ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் இஸ்ரோ விண்வெளி ஏவுத்தளம் அமைந்துள்ளது. இங்கிருந்து முதன்முதலாக தனியாருக்கு சொந்தமான ராக்கெட் விண்ணில் ஏவப்பட இருக்கிறது. இந்த ராக்கெட் நவம்பர் 12 முதல் 16-ஆம் தேதிக்குள் விண்ணில் செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ராக்கெட்டை ஹைதராபாத்தைச் சேர்ந்த ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. அதன் பிறகு ராக்கெட்டுக்கு விக்ரம் எஸ் என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2020-ம் ஆண்டு விண்ணில் ராக்கெட் செலுத்துவதற்கு தனியாருக்கு திறந்து விடப்பட்ட நிலையில், தற்போது தான் முதன் முதலாக தனியாருக்கு சொந்தமான ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது. இந்நிலையில் வணிக ரீதியில் அழைக்கப்படும் ராக்கெட்டில் வாடிக்கையாளர் களின் 3 சுமைகள் அனுப்பப்படும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் முதன்முதலாக தனியாருக்கு சொந்தமான ராக்கெட்டை ஏவிய நிறுவனம் என்று பெருமையை ஸ்கைரூட் நிறுவனம் பெறும்.