Categories
சினிமா தமிழ் சினிமா

தல அஜித் நடிக்கும் துணிவு படத்தின் முதல் பாடல் இணையத்தில் லீக்?…. பெரும் அதிர்ச்சியில் படக்குழு…..!!!!!

நேர்கொண்ட பார்வை, வலிமை திரைப்படத்தை தொடர்ந்து எச். வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் அஜித் துணிவு என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் மஞ்சு வாரியர் ஹீரோயினாக நடிக்க சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்த படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் என்று கூறப்பட்ட நிலையில், படத்தின் டப்பிங் பணிகளை அஜித் மற்றும் மஞ்சு வாரியர் முடித்துள்ளனர். இந்நிலையில் துணிவு திரைப்படத்தில் அனிருத் ஒரு பாடலை பாடியுள்ளார்.

 

வேதாளம் படத்தில் இசையமைப்பாளர் அனிருத் பாடிய ஆலுமா டோலுமா என்ற பாடல் சூப்பர் ஹிட் ஆன நிலையில், தற்போது துணிவு படத்தில் அவர் பாடிய சில்லா சில்லா என்ற பாடலும் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து துணிவு திரைப்படத்தை அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு படக குழுவினர் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ள நிலையில், தளபதி விஜயின் வாரிசு திரைப்படமும் பொங்கல் தினத்தில்  ரிலீஸ் ஆகிறது.

இந்நிலையில் அனிருத் பாடிய சில்லா சில்லா பாடல் தற்போது இணையத்தில் லீக் ஆகியுள்ளது. அதில் அனிருத் குரலில் சில நிமிடங்கள் பாடலானது கேட்கும் நிலையில், அதை ரசிகர்கள் வலைதளத்தில் பகிர்ந்து வருவதோடு ஆலுமா டோலுமா பாடலைப் போன்று சில்லா சில்லா பாடலும் இருப்பதாக கமெண்ட் செய்து வருகிறார்கள். மேலும் டிசம்பர் 9-ஆம் தேதி முதல் பாடல் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ள நிலையில், தற்போது இணையத்தில் லீக் ஆனது பட குழுவினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |