Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

வேட்டிய மடிச்சு கட்டி… ”நாற்று நட்டு, மாஸ் காட்டிய EPS”….. விவசாயிகள் நெகிழ்ச்சி…!!

நாகை மருத்துவ கல்லூரி அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்கச் சென்ற முதல்வர் நீடாமங்கலத்தில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

நாகையில் நடைபெற்ற மருத்துவ கல்லூரி அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்கச் சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் வழியாக சென்றார். அப்போது அப்பகுதி மக்கள் முதல்வரை வரவேற்றனர். சாலையின் இருபுறங்களிலும் திரண்ட ஏராளமான பொதுமக்களும் , விவசாயிகளும் முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பளித்தனர். வரவேற்பு நிகழ்ச்சியில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் வரவேற்பு விழாவில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி விவசாயிகளின் துயர் துடைப்பது தமிழக அரசின் நோக்கம் என குறிப்பிட்டார். முன்னதாக வாகனத்தில் சென்று கொண்டிருந்த முதலமைச்சர் பழனிசாமி சித்தமல்லி பகுதியில் விவசாயிகள் நாற்று நடும் பணியை பார்த்ததும் வாகனத்தில் இருந்து இறங்கிய முதலமைச்சர் விளை நிலத்தில் இறங்கி நாற்று நட்டு விவசாயிகளுடன் உரையாடினார்.

Categories

Tech |