விஜய் அப்பா – மகன் என இரட்டை வேடங்களில் நடித்து நாளை வெளியாகவிருக்கும் படம் பிகில். அட்லி இயக்கும் இந்த படத்துக்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். பெண்களின் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து உருவாகிவரும் இப்படத்தில் விஜய் பயிற்சியாளராக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். மேலும், இந்துஜா, யோகி பாபு, கதிர், ஷாக்கி ஷெராஃப், விவேக் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
ஆரம்பத்தில் இருந்தே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்திருந்த நிலையில், படத்தின் ட்ரெய்லர், பாடல்கள் இன்னும் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
தீபாவளியை முன்னிட்டு நாளை 25- ஆம்தேதி வெளியாகும் இப்படம் தமிழ் நாடு மட்டுமல்லாது உலகம் முழுவதும் வெளியாகிறது. குறிப்பாக முஸ்லிம் நாடான சவுதி அரேபியாவில் பிகில் வெளியாகிறது. இப்படம் அங்கு வெளியாகும் முதல் தமிழ் படமாகும். சவுதி அரேபியாவில் உள்ள ஐமேக்ஸ் திரையரங்குளில் திரையிடப்படுகிறது. பிகில் திரைப்படம் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் வளைகுடா நாடுகளில் சிறப்புக்காட்சிகள் உள்ளூர் நேரப்படி அதிகாலை 2.30 மணிக்கு தொடங்குகிறது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளனர்.
VOX Cinemas – Mall of the Emirates is all set for the big #Diwali release of #Bigil on 25th October!
Have you booked your tickets?
Book now: https://t.co/bTp19BsID0@Ags_production @APIfilms @PharsFilm @voxcinemas #BigilTicketHelp #BIGILStormFromOct25 pic.twitter.com/0ZVHwB7LIv
— Golden Cinema (@GoldenCinemaGCC) October 23, 2019
KDM issued for #Bigil in #UAE & #GCC. Shows starting from 2.30am on 25th Oct. It’s the first Tamil film that will be releasing on the same date in #SaudiArabia
We’re all set for the #BigilDiwali @Ags_production @actorvijay @Atlee_dir @arrahman @PharsFilm #BIGILStormFromOct25
— Golden Cinema (@GoldenCinemaGCC) October 23, 2019