கொரோனா தடுப்பூசியை முதலில் மோடி போட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி எம்பி ஜோதிமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உலகம் முழுவதும் கொரோனா பரவி வருவதால், தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் இறங்கி வருகின்றனர். இந்நிலையில் ஒரு சில நிறுவனங்களின் தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. இந்தியாவில் கோவிஷில்டு மற்றும் கோவாக்சின் தடுப்பு மருந்துகளுக்கு மத்திய அரசு அவசர அனுமதி அளித்துள்ளது. ஆனால் முறையான பரிசோதனை இல்லாமலே அவசரகதியில் அனுமதி வழங்கியதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த குழப்பங்களுக்கு மத்தியில் முதல் தடுப்பூசியை பிரதமர் மோடி போட்டுக்கொள்ள வேண்டும் என்றும், எனவே நாட்டு மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும் என்று காங்கிரஸ் சவால் விடுத்துள்ளது.
இந்நிலையில் நமது மருத்துவ ஆராய்ச்சி நிறுவனங்கள் நீண்ட அனுபவமும், நம்பகத்தன்மையும் மிக்கவை. முறையான அறிவியல் வழிமுறைகளை பின்பற்ற அரசு போதுமான கால அவகாசம் அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்பி ஜோதிமணி வலியுறுத்தியுள்ளார். மேலும் அவசரகதியில் சர்ச்சைக்குரிய முறையில் தடுப்பூசிகளை பயன்படுத்தக்கூடாது. மேலும் பிரதமர் மோடி முதலில் இந்த கொரோனா தடுப்பூசி போட வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.