முதன்முதலாக மஞ்சள் நிறத்திலான பென்குவினை கண்ட ஆய்வாளர் ஒருவர் அதை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அண்டார்டிகா பகுதியில் உள்ள தெற்கு ஜாவா கடல் பகுதியில் பறவைகள் குறித்து ஆய்வாளர் ஒருவர் தன்னுடைய ஆவணப் படத்தை எடுத்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு உடல் முழுவதும் மஞ்சள் நிறமாக கொண்ட பெண்குயின் ஒன்றை கண்டுள்ளார். அதனுடன் வழக்கமான நிறத்தில் உள்ள பெங்குவின் ஒன்றும் வந்துள்ளது.
இதையடுத்து அந்த ஆய்வாளர் அந்த இரண்டு பென்குவின்களையும் புகைப்படம் எடுத்துள்ளார். மற்ற உயிரினங்களில் காணப்படும் வெள்ளை நிறத்தில் இருப்பதை போல முதன்முதலாக பென்குவினை பார்த்துள்ளதாக அவர் தன்னுடைய இணையப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.