Categories
சென்னை மாநில செய்திகள்

கோயம்பேட்டில் செயல்பட்டு வந்த பூ மற்றும் பழ சந்தை வரும் 30ம் தேதி முதல் மாதவரத்திற்கு மாற்றம்!

கோயம்பேட்டில் செயல்பட்டு வந்த பூ மற்றும் பழ சந்தை மாதவரத்திற்கு மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கோயம்பேட்டில் செயல்பட்டு வந்த பூ மற்றும் பழ சந்தை வரும் வியாழக்கிழமை முதல் மாதவரத்திற்கு மாற்றப்படுவதாக சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் கார்த்திகேயன் அறிவித்துள்ளார். இட நெருக்கடியை குறைப்பது தொடர்பான நடத்திய ஆலோசனையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. காய்கறி கடைகள் வழக்கம் போல கோயம்பேட்டில் இயங்கும் என்றும் மார்க்கெட்டில் சில்லரை விற்பனைக்கு தடை செய்யப்பட்டுள்ளதாக கார்த்திகேயன் கூறியுள்ளார்.

சென்னை கோயம்பேடு சந்தைக்கு செல்ல பொதுமக்கள் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், அதிகாலை முதல் 7.30 மணி வரை மொத்த கொள்முதலுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தகவல் அளித்துள்ளார். மேலும் இயல்புநிலை திரும்பும் வரை கட்டுப்பாடுகள் தொடரும் என கூறப்பட்டுள்ளது.

கோயம்பேடு மார்க்கெட்டில் பணிபுரியும் இருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று காலை கோயம்பேடு சந்தையில் நேற்றுவரை வியாபாரம் செய்த பூக்கடைக்காரருக்கு இன்று கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து கோயம்பேடு காய்கறி சந்தையில் நடமாடும் வாகனம் மூலம் வியாபாரிகளுக்கு கொரோனா பரிசோதனை நடைபெறுகிறது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |