மக்களை கொன்று இதயத்தை சாப்பிட்ட குற்றவாளியின் வழக்கு தற்போது நீதிமன்ற விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ளது.
லைபீரியா நாட்டின் அதிபரான சார்லஸ் டெய்லருக்கு எதிராக கிளர்ச்சியின் போது 18 கொலைகள், குழந்தைகளை போர்வீரர்களாக பயன்படுத்துதல், வன்புணர்வு, அடிமைத்தனம், பொருட்கள் சூறையாடுதல் மற்றும் கொலை செய்யப்பட்டவர்களின் இதயத்தை சாப்பிடுதல் ஆகிய பயங்கர குற்றச்செயலில் ஈடுபட்டவர் ULIMO அமைப்பின் தளபதி Alieu Kosiah(45). இவர் சுவிட்சர்லாந்துக்கு வந்து அங்கேயே நிரந்தரமாகத் தங்கியுள்ளார்.
இந்நிலையில் போர் குற்றங்களில் ஈடுபட்டதற்காக அவர் கடந்த 2014-ம் வருடம் நவம்பர் மாதம் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது அவர் மீதான போர்க் குற்றங்கள் சுவிட்சர்லாந்தின் குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. ஆனால் இவர் தன் மீதான எல்லா குற்றச்சாட்டுகளையும் மறுத்ததுடன், எந்த வகை குற்றங்களிலும் ULIMO அமைப்பு ஈடுபடவில்லை என்று கூறியுள்ளார். இருப்பினும் இந்த வழக்கு தொடர்ந்து வருகிறது.