Categories
தஞ்சாவூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இப்ப என்னாச்சுன்னு பாருங்க… ஜோதிகா குறிப்பிட்ட மருத்துவமனையில் 10 விஷபாம்புகள்..!

நடிகை ஜோதிகா விழாவில் குறிப்பிட்ட இராசா மிராசுதார் மருத்துவமனையில் இருந்து கொடிய விஷத்தன்மையுள்ள 5 கட்டுவிரியன் பாம்புகள் உள்பட 10 பாம்புகளை வனத்துறையினர் பிடித்துள்ளனர்.

சமீபத்தில் நடிகை ஜோதிகா, தனியார் விருது வழங்கும் விழா ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர்,  தஞ்சை அரசு ராசா மிராசுதார் மருத்துவமனையில் சரியான பராமரிப்பு இல்லை ரொம்ப மோசமாக உள்ளது.. என் வாயால சொல்ல முடியல என பேசினார். மேலும் கோயிலுக்கு காசு கொடுக்குறீங்க.. உண்டியலில் காசு போடுறீங்க.. அதேகாச  பள்ளிகள் மற்றும் மருத்துவமனை கட்ட கொடுங்க என்று கேட்டுக்கொண்டார்..

ஆனால் இந்த கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டது.. அதாவது, அவர் உண்டியலில் காசு போடாதீங்கன்னு சொல்லவில்லை.. கோயிலுக்கு காசு கொடுப்பதை போலவே ஆஸ்பத்திரி, மருத்துவமனை கட்டுவதற்கு கொடுங்க என்றார்..

இந்தக் கருத்து சமூக வலைத்தளங்களில் பரவி சமூக ஆர்வலர்கள் மத்தியிலும் பெரும் சர்ச்சையை கிளப்பியது. ஒருபுறம் ஜோதிகாவின் கருத்துக்கு ஆதரவும், மறுபுறம் எதிர்ப்பும் கிளம்பியது.. இந்த சூழலில் ஜோதிகாவின் கணவரும், நடிகருமான சூர்யா ஒரு அறிக்கையை வெளியிட்டு எதிர்த்தவர்களின் வாயை அடைத்தார்..

இந்நிலையில், நடிகை ஜோதிகா சுட்டிக்காட்டி பேசிய அதே மருத்துவமனையில் பணி புரியும் பெண் ஊழியர் ஒருவரை மருத்துவமனை வளாகத்தினுள் புகுந்து பாம்பு ஒன்று கடித்துள்ளது. இதையடுத்து உடனடியாக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார் அந்த பெண்.
அதை தொடர்ந்து சம்பவம் குறித்து தகவலறிந்த மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் உத்தரவின் பேரில், மருத்துவமனை வளாகத்தை சுற்றி  பாம்பு பிடிக்கும் பணி நடைபெற்றது. ஜேசிபிகளை வைத்து  புதர்களை சுத்தம் செய்ததில், கொடிய விஷத்தன்மையுள்ள  5 கட்டுவிரியன் பாம்புகள் உள்பட 10 பாம்புகளை வனத்துறையினர் பிடித்தனர். இந்தசம்பவம் மருத்துவமனைக்கு தினந்தோறும் வரும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மக்கள் மத்தியில் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை ஜோதிகா தஞ்சை அரசு ராசா மிராசுதார் மருத்துவமனை மோசமாக உள்ளது என்று கூறியிருக்க, தற்போது அங்கிருந்து 10 பாம்புகள் பிடிக்கப்பட்டிருப்பது ஜோவை எதிர்த்தவர்களுக்கு ஒரு பாடமாக அமைந்திருக்கிறது..

Categories

Tech |