டி-20 உலகக்கோப்பை தள்ளிவைக்கப்பட்டதற்கு பிசிசிஐதான் காரணம் என பாகிஸ்தானின் முன்னாள் வீரர் குற்றம்சாட்டியுள்ளார்.
ஆஸ்திரேலியாவில் இந்த வருடம் செப்டம்பர் மாதம் நடைபெற இருந்த டி20 உலக கோப்பை அடுத்த ஆண்டிற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.. இதையடுத்து ஐபிஎல் போட்டிகள் செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், டி20 உலக கோப்பை போட்டிகள் அடுத்த ஆண்டு ஒத்திவைக்கப்பட்டதற்கு பிசிசிஐ தான் காரணம் என பாகிஸ்தானின் முன்னாள் வீரர் சோயிப் அக்தர் குற்றம்சாட்டியுள்ளார்.
அவர் கூறுகையில்: “ஆசிய கோப்பை நடந்திருக்கலாம்.. இதில் இந்தியாவும் பாகிஸ்தானும் எதிர்த்து விளையாட வாய்ப்பு கிடைத்திருக்கும்.. இந்த போட்டி ஒத்தி வைப்பதற்கு பல காரணங்கள் உண்டு.. டி20 உலகக்கோப்பை கூட நடந்திருக்கலாம், ஆனால் அது நடக்கவில்லை.. ஐபிஎல் போட்டிக்கு பாதிப்பு வரக்கூடாது, உலககோப்பை போட்டி எப்படி போனால் அவர்களுக்கென்ன” என்று குற்றம்சாட்டியுள்ளார்.