Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 4-வது சுற்று பொறியியல் கலந்தாய்வு…. அமைச்சர் பொன்முடி வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….!!!!!

உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, தமிழகத்தில் பொறியியல் படிப்புக்கான 3 கட்ட கலந்தாய்வுக் கூட்டங்கள் நடைபெற்ற நிலையில், தற்போது 4-வது கட்ட கலந்தாய்வு நடைபெற இருக்கிறது. இந்த கலந்தாய்வு கூட்டம் நவம்பர் 14-ஆம் தேதி சென்னையில் நடைபெறுகிறது.

அதன் பிறகு 3 சுற்றுகள் கலந்தாய்வுக் கூட்ட முடிவில், 89,585 மாணவர்கள் பொறியியல் படிப்பில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கடந்த வருடம் 80 ஆயிரத்து 383 பேர் சேர்ந்திருந்த நிலையில், நடப்பாண்டில் 10,000 மாணவர்கள் அதிகமாக சேர்ந்துள்ளனர். இனி நடைபெறும் 4-வது சுற்று கலந்தாய்வுக் கூட்டத்திலும் மாணவர்கள் சேர்க்கை நடைபெறும் நிலையில், துணை கலந்தாய்வு காலி பணியிடங்களும் நடைபெறும்.

இதனையடுத்து 4000 ஆசிரியர் பணியிடங்களை கல்லூரிகளில் நிரப்புவதற்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியை ஆசிரியர் தேர்வு வாரியம் செய்யும். 5408 உதவி பேராசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு ஆன்லைனில் விண்ணப்பிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 3000 காலிப்பணியிடங்களில் விருப்பப்படி சேர்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கு 10 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அதோடு சீனியாரிட்டி அடிப்படையில் இடமாறுதல் வழங்கப்படும். மேலும் பிஇ பாடங்களை தமிழ் வழியில் மொழிபெயர்க்க தமிழ்நாடு பாடநூல் கழகம் மற்றும் தமிழ் வளர்ச்சி துறை சார்பில் பணிகள் நடைபெறுகிறது என்று கூறினார்.

Categories

Tech |