Categories
அரசியல் மாநில செய்திகள்

நரிகள் சாயம் வெளுத்துப் போச்சு டும், டும், டும்… ராஜா வேஷம் கலைஞ்சு போச்சு டும், டும், டும்….. OPS, TTV, சசிகலாவை நக்கலடித்த ஜெயக்குமார் …!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழ முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,நரிகளின் சாயம் வெளுத்துப் போச்சு டும் டும் டும்.  ராஜா வேஷம் கலைஞ்சு போச்சு டும் டும் டும் . எல்லா நரிகளின் சாயங்காலம் இன்றைக்கு வெளுத்துப் போகின்ற காலம் தான் இது. அதனால என்னதான் சாயம் போட்டாலும் சரி, அது வெளுத்துப் போகும். ஓபிஎஸ், டிடிவி, திரும்ப சசிகலா இவங்க வேணும்னா ஒன்னு சேரலாம். ஆனால் இவங்க எல்லாம் எங்க கட்சியில சேர்த்துக்கோணும்னா கண்டிப்பா அது ஜென்மதத்திலும் நடக்காது கண்ணா,  நடக்காது கண்ணா.

திமுகவும் சரி, திமுகவுடைய ஏவல் துறையான காவல் துறையும் சரி, இரண்டாவது நம்முடைய அரசியல் எதிரிகள் அமமுக, சமீபத்தில் இருந்து, இந்த இயக்கத்துக்கு துரோகம் செய்து,  பிரிந்து போய், நாம் ஒருவர் நமக்கு ஒருவர் என்று இருக்கின்ற ஓபிஎஸ் தரப்பும் சரி,  தாராளமாக வரட்டும்.

வீடெல்லாம் நல்லா துடைச்சு கிளீன் பண்ணிட்டு, போகட்டும். அங்கங்க பேப்பர் குப்பை குப்பையாய் இருக்கு. என்னால டைம் இல்ல. எல்லாமே அடுக்கிறதுக்கு. வீட்டுக்கு வரட்டும். நல்லா அடுக்கி சுத்தப்படுத்தி,  கிளீன் பண்ணி,  குடுத்துட்டு போனா நல்லது.திராவிட மாடலாச்சுனு சொல்லிட்டு, திராவிடத்தையே இழுக்கு படுத்துகின்ற வகையில் தான் இன்னைக்கு அவங்களுடைய செயல்பாடு இருக்கின்றது.  தமிழ்நாட்டின் மானம் கப்பல் ஏறும் அளவுக்கு, இன்னைக்கு திமுக செஞ்சி இருக்கிறது  மிகவும் வருத்தப்படக்கூடிய,  கண்டனத்திற்குரிய ஒரு விஷயமாக இருக்கின்றது என தெரிவித்தார்.

Categories

Tech |