Categories
அரசியல் மாநில செய்திகள்

வரலாற்றை புரட்டிய விசிக…! விரட்டிவிரட்டி அடிக்கும் திருமா… செம கடுப்பில் பாஜக, ஆர்.எஸ்.எஸ் ..!!

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசும் போது, நாங்கள் மக்களுக்கு விநியோகிக்கும் மநுஸ்மிருதி எனும் நூல், திராவிட இயக்கங்களால் உருவாக்கப்பட்டது,  எழுதப்பட்டது அல்ல, பெரியார் இயக்கங்களால், அம்பேத்கர் இயக்கங்களால், இடதுசாரி இயக்கங்களால் மொழி பெயர்க்கப்பட்டவை அல்ல. நாங்கள் மூன்று புத்தகங்களை குறிப்பு எடுத்து,  ஒப்பீடு செய்து பார்த்தோம். அந்த மூன்று புத்தகங்கள் ராமானுஜாச்சாரியார்…

1865 டிசம்பரில் எழுதிய மனுதர்ம சாஸ்திரம். ராமானுஜ ஆச்சாரியார் இடதுசாரி இயக்கத்தை சார்ந்தவர் அல்ல, கிறிஸ்தவர் அல்ல, முஸ்லிமல்ல, திராவிட இயக்கத்தை சார்ந்தவர் அல்ல, அம்பேத்கர் இயக்கத்தை சார்ந்தவர் அல்ல, ராமானுஜ ஆச்சாரியார் ஐயங்கார் எழுதிய நூல்தான் மனுதர்ம சாஸ்திரம். இரண்டாவதாக அன்னை ஸ்ரீ ஆனந்த நாச்சியார் அம்மாள் அவர் பிரம்ம பீடத்தின் இளைய பீடாதிபதி. மனுநீதி என்னும் தர்மசாஸ்திரம் இந்து பப்ளிகேஷன் 2011 இந்த நூலையும் நாங்கள் எடுத்து பார்த்தோம்.

மூன்றாவது திரிலோக சீதாராம் என்பவர் எழுதிய மனுதர்ம சாஸ்திரம், இந்த மூன்று நூல்களையும் ஒப்பீடு செய்து தான்.. இதிலே சூத்திரர்களை பற்றியும், பெண்களைப் பற்றியும் என்ன சொல்லி இருக்கிறது ? என்பதை அவர்கள் எழுதி இருக்கின்ற மொழியிலேயே..  சமஸ்கிருத வட மொழியிலேயே நாங்கள் பதிப்பித்திருக்கிறோம்.

அதுமட்டுமில்லாமல் ”ஸ்ரீகளுக்கு உரிய பத்ததி” என்கின்ற இன்னொரு புனித நூல். பெண்கள் எப்படி இருக்க வேண்டும் ? என்று இந்து மத புனித நூல் வழிகாட்டுகிறது. அந்த நூலையும் அதில் உள்ள சில பகுதிகளையும் இதிலே பதிப்பித்திருக்கிறோம். அதை எழுதியவர் ”ஸ்ரீ த்ரியம்பகர மகி” அவர் எழுதிய நூல். எஸ்.ஆர் கிருஷ்ணமூர்த்தி ஐயர் வெளியிட்டு இருக்கிறார்.

அதனுடைய ஒரு பகுதியை இதில் பதிவு செய்திருக்கிறோம். புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் சூத்திரர் யார் ? என்று எழுதிய புத்தகத்தில் சூத்திரர்களை பற்றியும், பெண்களைப் பற்றியும் அவர் தொகுத்ததையும் பக்கம் 27-இல் பதிவு செய்திருக்கிறோம். ஆகவே இந்த புத்தகம் மனுஷ்மிருதியில் பெண்களை பற்றியும்,  சூத்திரர்களை பற்றியும் என்ன சொல்லி இருக்கிறது ? என்பதை நாங்கள் சுருக்கமாக பதிவு செய்து,  பொதுமக்களுக்கு விநியோகம் செய்கிறோம் என தெரிவித்தார். மநுஸ்மிருதி குறித்த புத்தகத்தை மக்களுக்கு வழங்க வரலாற்று ஆவணங்களை புரட்டி விசிக எழுதியுள்ளது பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினரை அதிர்ச்சி அடையவைத்துள்ளது.

Categories

Tech |