Categories
உலக செய்திகள்

இரயில் கட்டணத்தை குறைக்கும் முடிவு..! பிரபல நாட்டில் நடந்த வாக்கெடுப்பு… வெளியான முக்கிய தகவல்..!!

இரயில் கட்டணத்தை குறைக்க பிரான்ஸ் அரசு முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிரான்சில் உள்ள செனட் சபையில் நேற்று ரயில் கட்டணத்தை குறைக்க வாக்கெடுப்பு நடைபெற்றது. அதாவது சுற்றுச்சூழல் மாசுபடுவதை தவிர்க்கும் பொருட்டு ரயில் கட்டணத்தை குறைக்க இந்த முடிவு எடுக்கப்பட்டு நேற்று வாக்கெடுப்பும் நடைபெற்றுள்ளது. அதில் 5.5 சதவீதம் ரயில் பயணச் சீட்டின் வரியில் குறைக்கலாம் என்றும், மக்கள் பலரும் பயணத்துக்கான செலவை குறைப்பதற்காக பொது போக்குவரத்தை பயன்படுத்த தொடங்குவார்கள் என்ற காரணத்தினால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் வலதுசாரியினர் செனட் மேற்சபையில் ஆக்கிரமித்திருந்ததால் இந்த வாக்கெடுப்பு வெற்றியடையவில்லை. மேலும் வலதுசாரியினர் இந்த வரியை குறைப்பதன் மூலம் எந்தவிதமான பயனும் இல்லை என்று வாதத்தில் ஈடுபட்டிருந்தனர். இதையடுத்து மீண்டும் விரைவில் மற்றொரு வாக்கெடுப்பு இது தொடர்பாக நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |