மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள சாந்தன் நகர் பகுதியில் வசித்து வரும் ஒரு பெண்ணின் கணவர் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், அவருடைய நண்பர் சகீர் சிறையில் இருக்கும் நபரின் மனைவியோடு நட்பு பாராட்டியுள்ளார். அந்த பெண்ணிடம் சகீர் உங்கள் கணவனை வெளியே கொண்டு கொண்டு வருவதற்கு உதவி செய்வதாக கூறியதோடு நிதி உதவியும் தருவதாக வாக்கு கொடுத்துள்ளார். அதன் பின் அந்த பெண்ணுடன் உடல் சார்ந்த உறவுகளை ஏற்படுத்த பகீர் முயற்சி செய்ய அதற்கு பெண்மணி மறுப்பு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அந்த பெண்ணின் கணவர் சிறையில் இருந்து வெளியே வந்த நிலையில், சகீர் தன்னுடைய கூட்டாளிகள் இருவருடன் அப்பெண்ணின் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு வீட்டில் இருந்தஅந்த பெண்ணின் கணவரை வழக்கு தொடர்பாக பேச வேண்டும் என்று வெளியே அழைத்து சிறிது தொலைவில் நின்று பேசியுள்ளனர். அந்த சமயத்தில் மற்றொரு நண்பர் வீட்டிற்கு வெளியே காவலாக நிற்க சகீர் வீட்டுக்குள் சென்று அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இந்நிலையில் சகீர் மற்றும் அவருடைய நண்பர்கள் அங்கிருந்து சென்ற பிறகு தனக்கு நடந்தவற்றை தன்னுடைய கணவரிடம் கூறி கதறி மனைவி அழுதுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியான கணவர் காவல் நிலையத்தில் சகீர் உட்பட 3 பேர் மீது புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து 2 பேரை கைது செய்துள்ளனர். மேலும் முக்கிய குற்றவாளியான சகீரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகிறார்கள்.