மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியை விட்டு விலகிய ஜோதிராதித்ய சிந்தியா டெல்லியில் உள்ள அக்கட்சி அலுவலகத்தில் தேசிய தலைவர் ஜெ.பி நட்டா முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். பின்னர் பேசிய அவர் , நான் எடுத்த முடிவால் இந்த நாள் வாழ்க்கையில் மறக்க முடியாத நாளாக அமைந்துவிட்டது.
பிரதமர் நரேந்திர மோடியின் அர்ப்பணிப்பு , கொள்கைகளை கண்டு வியக்கிறேன். நாட்டின் எதிர்காலம் பிரதமர் மோடியின் கையில் பாதுகாப்பாக இருக்கும். காங்கிரஸ் கட்சியின் இளம் தலைவர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர். முன்பு இருந்ததை போல காங்கிரஸ் கட்சி தற்போது இல்லை என்று குற்றம் சாட்டினார்.