ஜி7 மாநாடு அடுத்த ஆண்டு ஜூன் 10ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த மாநாடு அமெரிக்க அதிபர் ட்ரம்பின் ரிசார்ட்டில் நடக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ட்ரம்புக்கு அதிக வருவாய் ஈட்டித் தருவதில் கோல்ப் கிளப் முக்கிய பங்கு வகிக்கும் நிலையில், இந்த மாநாடு அங்கு நடைபெறவுள்ளது.
புளோரிடா மாகாணத்தில் உள்ள கோல்ப் கிளப்பில் ஜி7 மாநாடு நடைபெறவுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், பலரும் அதனை விமர்சனம் செய்து வருகின்றனர். கோல்ப் அதன் பொலிவை இழந்து வருகிறது, முன்பு போல் இல்லை. அரசியல் லாபத்திற்காக டிரம்ப் இதனை செய்வதாக எதிர்க்கட்சியினர் கூறி வருகின்றனர்.