Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

விளையாட்டு விபரீதத்தில் முடிந்தது… பரிதாபமாக உயிரிழந்த சிறுமி… சோகத்தில் குடும்பத்தினர்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் மரத்தில் சேலையால் ஊஞ்சல் கட்டி விளையாடிய சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தை அடுத்துள்ள தங்கச்சிமடம் பகுதியில் முகமது இப்ராஹிம் வசித்து வந்துள்ளார். தற்போது இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருவதால் அவரது மனைவி குழந்தைகளுடன் தங்கச்சிமடம் முஸ்லீம் தெருவில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அவர்களது 14 வயது மகளான பஸ்சானா வீட்டிற்கு அருகே உள்ள மரத்தில் சேலையில் ஊஞ்சல் கட்டி விளையாடி கொண்டிருந்துள்ளார்.

அப்போது எதிர்பாராத விதமாக மரத்தில் கட்டிருந்த சேலை சிறுமியின் கழுத்தை நெரித்துள்ளது. இதனைத்தொடர்ந்து சிறுமி மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது தாயார் உடனடியாக ராமேஸ்வரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். ஆனால் சிறுமி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Categories

Tech |