சென்னை ஐஸ்ஹவுஸ் நடேசன் சாலை பகுதியைச் சேர்ந்த ராம் குமார் என்பவரை 10 பேர் கொண்ட கும்பல் கடத்திச் சென்றது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை ஐஸ்ஹவுஸ் பக்கத்தில் வசித்து வருபவர் ராம்குமார். இவர் AC மெக்கானிக்காக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இன்று தனது வீட்டின் அருகே நின்று ராம்குமார் செல்போன் பேசி கொண்டிருந்த போது அங்கே வந்த 10 பேர் கொண்ட கும்பல் அவரை ஆட்டோவில் கடத்தி சென்றது.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் சந்தேகத்திற்கிடமான வகையில் 4 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர். மேலும் கடந்த 18ம் தேதி நடுப் பகுதியை சேர்ந்த ஒருவரை தாக்கியது தொடர்பாக ராம்குமாரை காவல்துறையினர் தேடிவந்தனர். இந்நிலையில் முன்விரோதம் காரணமாக ராம்குமார் கடத்தப்பட்டாரா அல்லது கடத்திய அவரை என்னை செய்தார்கள் என்பது குறித்து காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.