கேஸ் டேங்கர் லாரி சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த மினி சரக்கு வாகனம் மீது கவிழ்ந்த விபத்தால் 1மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது .
செங்கல்பட்டு அருகே சென்னையில் இருந்து மதுராந்தகத்தை நோக்கி கேஸ் நிரப்பிய டேங்கர் லாரி சென்று கொண்டிருந்தது .பரளுரில் உள்ள சென்னை ,திருச்சி நெடுச்சாலையில் சென்றபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த டேங்கர் லாரி, தடுப்பு சுவரின் மீது ஏறி சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்த டாடா எஸ் வாகனத்தின் மீது கவிழ்ந்தது .
விபத்தின் இடுபாடுகளில் சிக்கிய டாடா எஸ் வாகனத்தில் இருந்த 3பேரும், டேங்கர் லாரியின் ஓட்டுனரும் நீண்ட நேரத்திற்கு பிறகு காயங்களுடன் மீட்கப்பட்டனர் .இவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் .