Categories
உலக செய்திகள்

சாலையை கடந்து செல்லும் ராட்சச அனகோண்டா..!!

பிரேசிலில் ராட்சத அனகோண்டா பாம்பு ஒன்று, சாலையை கடந்து செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.. 

பிரேசில் நாட்டில் போர்டோ வெலோ (Porto Velho) என்னும் பகுதியில் போக்குவரத்து நெரிசல் நிறைந்த சாலையில் ராட்சச பச்சை நிற அனகோண்டா  பாம்பு ஓன்று இரு வழி  சாலையின் நடுவே உள்ள தடுப்பின் மீது ஏறி  மெதுவாக ஊர்ந்து சென்றது. இதனால் அந்த பகுதியின் வழியாக வந்த வாகனங்கள் நிறுத்தப்பட்டன.

Image result for Anaconda snake in Brazil, a video crossing the road is focused on social networks.இந்த பாம்பு சுமார் 3 மீட்டர் நீளம் , 30 கிலோ எடை கொண்டது. இந்த பச்சை நிற பாம்பை, அங்கிருந்த பலரும்  தங்களது கேமிராவிலும், மொபைல் போனிலும் படம்பிடிக்க ஆரம்பித்தனர். பின்னர் அந்தப் பாம்பு சாலையை கடந்து சென்று அங்கிருந்த  புல்வெளி நிறைந்த புதர்ப்பகுதிக்குள் சென்றது. பாம்பு சாலையை கடந்து சென்ற இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

Categories

Tech |