Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இளம்பெண்ணுக்கு உறுதியான தொற்று… திடீரென நடந்த விபரீதம்… திண்டுக்கல்லில் சோகம்..!!

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து கொண்டே வந்த நிலையில் தற்போது பாதிப்பு எண்ணிக்கை குறைய ஆரம்பித்துள்ளது. அதேபோல் கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. அதன்படி திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையை சேர்ந்த 21 வயது பெண் கொரோனா தொற்று காரணமாக மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனால் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை திண்டுக்கல் மாவட்டத்தில் 453 ஆக உள்ளது.

இதற்கிடையே மேலும் 284 பேருக்கு நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 52 பேர் பெண்கள் ஆவர். அதேசமயம் கொரோனாவிலிருந்து 393 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை கொரோனாவுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 25 ஆயிரத்து 897 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதற்கிடையே 2,492 பேர் நேற்றைய நிலவரப்படி கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Categories

Tech |