Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தற்கொலை செய்த இளம்பெண்… குழந்தை இல்லாதது காரணமா…? போலீசார் தீவிர விசாரணை…!

திருநெல்வேலி மாவட்டத்தில் காதலித்து திருமணம் செய்துகொண்ட இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அடுத்துள்ள பெரும்பத்தை பகுதியில் வைகுண்டராஜன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மகள் தங்கசாந்தினி(21) களக்காட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் சாந்தினிக்கும் களக்காடு மீனவன்குளத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளியான ரெனிஸ் முத்துக்குமார்(25) என்பவருக்கும் இடையில் காதல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இவர்கள் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டுள்ளனர். இதனைத்தொடர்ந்து இவர்களுக்கு திருமணமாகி குழந்தை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நேற்று முன்தினம் சாந்தினி வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் சாந்தினியின் தந்தை களக்காடு காவல்நிலையத்தில் என் மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக புகார் அளித்துள்ளார்.

இந்நிலையில் திருமணமாகி குழந்தை இல்லாத காரணத்தினால் முத்துக்குமார் வேறு ஒரு பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்யப்போவதாக கூறி சாந்தியிடம் அடிக்கடி சண்டை தகராறில் ஈடுபடுவர் என்றும், முத்துக்குமாரும் அவரது சகோதரனும் இணைத்து சாந்தியை கொடுமை படுத்துவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.  இதுவே என் மகள் தற்கொலைக்கு கரணம் என்று கூறியுள்ளார். இதனைத்தொடர்ந்து சந்தேகமடைந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான கரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |