நாமக்கல் மாவட்டத்தில் 16 வயது சிறுமியை காதலித்த இளைஞனை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியை அடுத்துள்ள மல்லசமுத்திரம் பாலிக்காடு என்ற பகுதியில் குணசேகரன்(16) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் கூலி தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமிக்கும் குணசேகரனுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து குணசேகரன் ஆசை வார்த்தைகள் கூறி சிறுமியை காதல் வலையில் வீழ்த்தியுள்ளார்.
இதனை அறிந்த சிறுமியின் பெற்றோர் சிறுமியை கண்டித்துள்ளனர். ஆனாலும் சிறுமி பெற்றோர் பேச்சை கேட்காமல் இளைஞரிடம் பழகியுள்ளார். இதனால் சிறுமியின் பெற்றோர் திருச்செங்கோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் குணசேகரன் மீது புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி குணசேகரனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.