கர்ப்பமுற்ற சில மணி நேரத்தில் இளம்பெண் ஒருவர் குழந்தையை பெற்றெடுத்த விசித்திர சம்பவம் இந்தோனேசியாவில் நடந்துள்ளது.
இந்தோனேசியா சிவாஜூர் நகரில் சிட்டி ஜைனா என்ற 25 வயதுடைய இளம்பெண் வசித்து வருகிறார். ஜைனா தான் கர்ப்பமானதை உணர்ந்த சில மணி நேரத்தில் குழந்தை பெற்றெடுத்துள்ளேன் என்ற விசித்திர நிகழ்வை கூறியுள்ளார். இது குறித்து அவர் ஊடகங்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, நான் மதியவேளையில் தொழுகைக்குப் பிறகு எனது வீட்டில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தேன்.அப்போது எனது பிறப்பு உறுப்புக்குள் ஏதோ காற்று புகுவதை நான் உணர்ந்தேன். அப்போது என் வீடு முழுவதும் பயங்கர காற்று வீசியது.
அதன்பின், அடுத்த 15 நிமிடங்களில் என் வயிறு பெரிதாகத் தொடங்கியது.பின்பு நான் மருத்துவமனைக்கு சென்றேன் என்று கூறினார். மருத்துவமனையில் ஜைனாவிற்கு ஒரு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. மேலும் கர்ப்பம் ஆனதற்கு ஜைனா கொடுத்த விளக்கம் மிகவும் விசித்திரமாக இருப்பதால் இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.