Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

ஜாலியாக சவாரி செய்த சிறுமி… தந்தைக்கு காத்திருந்த அதிர்ச்சி… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

நாமக்கல் மாவட்டத்தில் குதிரை சாவடி செய்து கொண்டிருந்த சிறுமி நிலை தடுமாறி கீழே விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள காக்காவேரி பகுதியில் ஜான் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவரும் அவரது சகோதரர் டேவிட் என்பவரும் இணைந்து திருச்செங்கோடு பகுதியில் சுமார் 10 குதிரைகளை வைத்து குதிரை ஏற்ற பயிற்சி பள்ளியை நடத்தி வருகின்றனர். இதனையடுத்து நேற்று காலையில் வழக்கம் போல பயிற்சி முடிந்த பிறகு ஜான் ஒரு குதிரையை மேய்ச்சலுக்காக அழைத்து சென்றுள்ளார். அப்போது அவரது மகன் நான்சி(7)குதிரையில் ஏறியுள்ளார்.

அப்போது எதிர்பாராதவிதமாக குதிரை மிரண்டு ஓடியுள்ளது. இதனைத்தொடர்ந்து நான்சி நிலைதடுமாறி கீழே விழுந்ததில் சிறுமியின் தலையில் அடிபட்டுள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த ஜான் உடனடியாக சிறுமியை மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்து வந்த நாமக்கல் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |