ஏழை மாணவி மிஸ் இந்தியாவின் இரண்டாவது இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
உத்திரபிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஒம்பிரகாஷ் சிங் என்பவர். ஆட்டோ ஓட்டுனரான இவரது மகள் மன்யா சிங் மிஸ் இந்தியா போட்டியில் இரண்டாவது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார். தன்னுடைய வெற்றி குறித்து மன்யா சிங் இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். அதில், என் சிறுவயதில் நான் பட்ட கஷ்டத்திற்கும், உழைப்பிற்க்கும் தற்போது நல்ல பலன் கிடைத்துள்ளது.
பல இரவுகள் நான் தூங்காமல், உணவின்றி இருந்துள்ளேன்.புத்தகங்கள்,ஆடைகள் வாங்கக் கூட என்னிடம் பணம் இல்லாத நிலை இருந்தது. வீடுகளில் பாத்திரம் கழுவியும், கால் சென்டரில் வேலை செய்தும் கல்வி பயின்று வந்தேன். என்னுடைய விடாமுயற்சியால் மிஸ் இந்தியாவின் ரன்னர் அப் ஆகியதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் என்று தெரிவித்துள்ளார். மேலும் அழகி போட்டிகளைப் பொறுத்தவரை எனக்கு நடிகை பிரியங்கா சோப்ரா முன் உதாரணமாக இருந்துள்ளார் என்று கூறியுள்ளார்.