Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நைசாக உள்ளே சென்ற இளம்பெண்… வீட்டை பூட்டு போட்ட பொதுமக்கள்… சென்னையில் நடந்த பரபரப்பு சம்பவம் …!!

சென்னையில் திருட்டு வேலையில் ஈடுபட்ட இளம் பெண்ணை பொதுமக்கள் வீட்டிற்குள் வைத்துப் பூட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அம்பத்தூர் அருகே ஓரகடம் லட்சுமி அம்மன் நகர் கம்பர் தெருவை சேர்ந்தவர் சக்கரவர்த்தி-நிர்மலா தம்பதியினர். இவர்கள் இருவருமே தொழிற்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். பெற்றோர்கள் வேலைக்கு செல்லும் போது தங்களது இரண்டு மகன்களையும் வீட்டில் விட்டு விட்டுப் பக்கத்தில் இருப்பவர்களை பார்த்துக் கொள்ளும்படி கூறிவிட்டு செல்வார்கள்.

இந்நிலையில், பெற்றோர்கள் வழக்கம்போல் குழந்தைகளிடம் சொல்லி விட்டு வேலைக்கு சென்றனர்.பெற்றோர்கள் சென்றவுடன் குழந்தைகள் தெருவில் விளையாடச் சென்றனர். அப்போது சக்கரவர்த்தியின் வீட்டிற்குள் அடையாளம் தெரியாத பெண் ஒருவர் நுழைந்து பீரோவை திறந்தார்.இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்து உடனடியாக அவரது வீட்டின் கதவை வெளிப்பக்கமாக பூட்டி விட்டனர்.

அதன்பின் சக்கரவர்த்திக்கு அவர்கள் தகவல் அளித்தனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு சக்கரவர்த்தி தகவல் தெரிவித்தார். தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் வீட்டின் பூட்டை திறந்து உள்ளே இருந்த பெண்ணை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

அதன் பின் அவரிடம் நடத்திய விசாரணையில்,அவர் சென்னை செங்குன்றம் மொண்டியம்மன்நகர் அண்ணாநகரை சேர்ந்த ரூபன் என்பவரின் மனைவி கோகிலா என்பது தெரியவந்தது. அதன்பிறகு கோகிலா மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் இதுபோன்று வேறு எங்காவது கைவரிசை காட்டியுள்ளாரா என்று விசாரித்து வருகின்றனர்.

Categories

Tech |