Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பெற்றோருடன் சென்ற சிறுமி… கண்முன்னே துடிதுடித்து உயிரிழப்பு… தப்பியோடிய டிரைவர்…!!

ராமநாதபுரத்தில் பெற்றோருடன் சாலையில் சென்று கொண்டிருந்த 7 வயது சிறுமி மீது டிராக்டர் ஏறி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் பேராவூரை அடுத்துள்ள மரப்பாலம் பகுதியில் செங்கல் காளவாசல் செயல்பட்டு வருகின்றது. இங்கு சிவகங்கை பகுதியிலிருந்து பல தொழிலார்கள் குடும்பத்துடன் தங்கியிருந்து வேலை பார்த்து வருகின்றனர். அதன்படி செங்கல் காலவாசலில் வேலை பார்த்து வரும் கார்த்திக் என்பவர் அவரது மனைவி ஜோதி மற்றும் மகள் பிரியங்காவுடன்(7) தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். இதனையடுத்து நேற்று கார்த்திக் காளவாசல் பகுதியில் உள்ள மெயின் ரோட்டில் மனைவி மற்றும் குழந்தையுடன் நடந்து சென்றுள்ளார்.

இதனைத்தொடர்ந்து அப்பகுதியாக வந்த டிராக்டர் எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்து சிறுமி பிரியங்கா மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் டிராக்டரின் சக்கரம் ஏறி சிறுமி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்துள்ளார். மேலும் அக்கம்பக்கத்தினர் திரட்டு வந்ததால் டிராக்டர் டிரைவர் வண்டியை நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார். மேலும் தகவலறிந்து வந்த கேணிக்கரை போலீசார் சிறுமியின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தப்பியோடிய டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |