Categories
தேனி மாவட்ட செய்திகள்

காதலனை எரித்த காதலி…. ஸ்கெட்ச் போட்டு கொடுத்த சகோதரி…. எல்லோரையும் தூக்கிய போலீஸ்…!!

பெண் ஒருவர் தனது காதலனை எரித்து கொலை செய்துள்ள சம்பவத்தில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

தேனி மாவட்டம் பெரியகுளம் பக்கத்தில் உள்ள மேலமங்கலம் வைகை புதூர் சாலை பக்கத்தில் 21ஆம் தேதி பாதி உடல் எரிந்த நிலையில் இளைஞரின் சடலம் கிடந்துள்ளது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்த தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விசாரணை மேற்கொண்டுள்ளார். மிரளும் சடலத்தை உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து மூன்று தினங்களுக்கு முன்பு கொலை நடந்து இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. மேலும் கொலை செய்யப்பட்ட திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஆனந்தராஜ்(29) என்பது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து காவல்துறை நடத்திய விசாரணையில் இவர் தன்னுடைய அத்தை மகளான விஜயசாந்தி என்பவரை காதலித்து வந்துள்ளார் என்பது தெரியவந்தது. இந்நிலை விஜயசாந்தியை காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்துள்ளனர். அப்போது விசாரணையில், ஆனந்துக்கு அவருடைய பெற்றோர் வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் செய்ய ஏற்பாடு செய்ததால் விஜயசாந்தி ஆனந்தராஜிடம் நியாயம் கேட்டுள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் விஜயசாந்தி தனது உறவுக்கார சகோதரன் பிரபாகரன் ஆகிய இரண்டு பேரும் இணைந்து ஆனந்தராஜ் கழுத்தை நெரித்து கொலை செய்து சடலத்தை மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொளுத்தியுள்ளனர்.

இந்த கொலைக்கு விஜயசாந்தியின் சகோதரி வித்யா அறிவுரை வழங்கி திட்டத்தை செயல்படுத்தி உள்ளார். இதையடுத்து போலீசார் கொலையாளிகள், கொலைக்கு திட்டம் தீட்டி கொடுத்தவர்கள், கொலையாளிக்கு அடைக்கலம் கொடுத்தவர்கள் எல்கோரையும் காவல்துறையினர் அனைவரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Categories

Tech |