இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் நவராத்திரி பண்டிகை விமர்சையாக கொண்டாடப்படும். அந்த வகையில் நடபாண்டில் கடந்த திங்கட்கிழமை நவராத்திரி பண்டிகை தொடங்கப்பட்டு வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. இந்த நவராத்திரி பண்டிகை என்பது துர்கா, லட்சுமி, சரஸ்வதி தேவிகளை வழிபடுவது வழக்கம். இந்த நவராத்திரி பண்டிகையின் கடைசி நாளில் விஜயதசமி கொண்டாடப்படும். இந்த நவராத்திரி பண்டிகையின் போது நாம் முப்பெரும் தேவிகளை வழிபடுவதால் நமக்கு வீரம், செல்வம் மற்றும் கல்வி போன்றவை கிடைக்கும் என்பது ஐதீகம்.
இதனையடுத்து நவராத்திரி பண்டிகையின் போது வைக்கப்படும் கொலுவில் மலைகள், பாதாள குகைகள், நீர்வீழ்ச்சிகள், ஆறுகள், எரிமலை நெருப்பு, ஹோம குண்ட அக்னியுடன் புகைமண்டலம், பாற்கடலில் மகாவிஷ்ணு, தியான சக்தி அதிர்வுகளுடன் சமுத்திரம், பிரமிடு குகை சப்தங்கள், புயல் மற்றும் தென்றல் காற்று சக்தி, பலவித மிருகங்கள், பறவைகள் சத்தத்துடனான சந்தன காடு, ஐஸ்வர்ய லட்சுமி குகை, மகாகாளியின் ராட்சசசம்கார மகிஷாசுரமர்த்தினி கோலம், சம்கார கோலம், மலை குகைகள், ஆற்று ஊற்றுகள், ருத்ராட்ச மரங்கள், பலவித சக்தி வாய்ந்த தெய்வீக பொருட்கள், பிரபஞ்ச சக்தியை உணர்த்தும் பொருட்கள் போன்றவற்றை வைத்து பூஜிப்பதால் அம்பாளின் அருளைப் பெறலாம் என்பது ஐதீகம்.
இப்படி கொலு வைத்து வழிபடுவதன் மூலம் மக்கள் தங்கள் வாழ்வில் தேவையான அனைத்து வகையான செல்வங்களையும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள் என்று கூறப்படுகிறது. மேலும் நவராத்திரி பண்டிகையின் போது அம்பாளுக்காக நாம் விரதம் இருந்து தினந்தோறும் பூஜை செய்து நெய்வேதியம் படைத்து வழிபட்டால் அம்பாளின் அருளை முழுமையாக பெறலாம்.