Categories
கிரிக்கெட் விளையாட்டு

உள்ளூரோ , வெளியூரோ வெற்றி தான் இலக்கு – கேப்டன் கோலி கருத்து…!!

மற்ற அணியில் 9 மற்றும் 10_ஆவது வரிசையில் இறங்கும் வீரர்கள் பேட்டிங் செய்கின்றனர் என்று கேப்டன் விராத் கோலி தெரிவித்துள்ளார்.

20 ஓவர் போட்டிகளில் பங்கேற்பதற்காக இந்தியா வந்துள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் விளையாட இருக்கின்றது. இரு அணிகளும் மோதும் முதல் போட்டி  இமாச்சலபிரதேச மாநிலத்தில் உள்ள மலைவாசஸ்தலமான தர்மசாலாவில்  இன்று நடக்கின்றது. இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியில் வெற்றி பெற இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த போட்டி குறித்து இந்திய கேப்டன் கோலி கூறுகையில், உள்ளூர் , வெளியூர் என எந்த போட்டியாக இருந்தாலும் வெற்றி பெறவே நாங்கள் விரும்புகிறோம். குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல் நீக்கம் குறித்து கேட்கின்றீர்கள்.  எப்போதும் ஒரே மாதிரியான கலவையுடன் அணி களமிறங்க  முடியாது. உலகின் மற்ற அணிகளை பார்த்தால் 9 மற்றும் 10 _ஆவது வரிசை வீரர்களும் பேட்டிங் செய்கின்றனர். நாமும் ஏன் அவ்வாறு செய்யக்கூடாது. நாங்கள் எந்த முடிவு எடுத்தாலும் அது இந்திய அணியின் எதிர்கால நலன் கருதியே இருக்கும் என்று தெரிவித்தார்.

Categories

Tech |