தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளதால் உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
கடந்த ஆண்டு அதிரடியாக உயர்ந்து வந்த தங்கத்தின் விலை 30 ஆயிரத்தை தாண்டியது . பின்னர் கடந்த சில வாரம் குறைய தொடங்கிய தங்கத்தின் ஏற்றம் , இறக்கம் என வாடிக்கையாளர்களுக்கு கண்ணாம்பூச்சி ஆட்டம் காட்டி வந்ததோடு 2020_ஆண்டின் தொடக்கத்தில் இருந்து மேலும் உயர்ந்தது.கடந்த 8 நாட்களில் ரூ 1,552 வரை உயர்ந்து வந்த தங்கத்தின் விலை இன்று பவுனுக்கு ரூ 528 அதிகரித்துள்ளது.
சென்னையில் ஆபரண தங்கம் கிராமுக்கு 66 ரூபாயும், சவரனுக்கு 528 ரூபாய்யும் உயர்ந்து பொதுமக்களை கடும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 31,432-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதே போல 22 காரட் 1 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ 3,929 _க்கு விற்பனை செய்யப்படுகின்றது. தங்கம் விலை அதிகரித்ததைபோல வெள்ளியின் விலையும் அதிகரித்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி 1.40 காசுகள் உயர்ந்து ரூபாய் 52.60-க்கு விற்பனை செய்யப்படுகின்றது.