முன்னணி நடிகர் சூர்யா ரசிகர்கள் சாலையோரம் வசிக்கும் ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்கி வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் கொரோனாவின் பரவல் மிகவும் தீவிரம் அடைந்து வருகிறது.இதனைக் கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இருப்பினும் கொரோனாவால் பலியாகுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேதான் செல்கிறது.
இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நடிகர், நடிகைகள், பல முக்கிய பிரமுகர்கள் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர். அந்த வகையில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சூர்யாவின் ரசிகர்கள் சாலையோரம் இருக்கும் ஆதரவற்ற மக்களுக்கு உணவு வழங்கி வருகின்றனர்.
மேலும் ஊரடங்கு முடியும்வரை அவர்களுக்கு உணவு வழங்க முடிவு செய்துள்ளனர். கொரோனாவின் முதல் அலையின் போதும் சூர்யா ரசிகர்கள் 145 நாட்களுக்கு சாலையோரம் இருத்த ஆதரவற்ற மக்களுக்கு உணவு வழங்கி உதவி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.