தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனா பாதித்த 1017 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
தமிழகத்தில் இன்று மேலும் 2141 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு 2ஆவது நாளாக பாதிப்பு 2ஆயிரத்தை தாண்டியுள்ளது. அதிகபட்சமாக தலைநகர் சென்னையில் 1373 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த எண்ணிக்கை 37,070ஆக உயர்ந்துள்ளது. தமிழகம் முழுவதும் 52,334 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.
தமிழகத்தில் மொத்த பாதிப்பாக 52,334ஆக உயர்ந்துள்ளது. இதில் வெளிநாட்டு விமானம் மூலமாக வந்த 10 பேரும், உள்நாட்டு விமானம் மூலம் வந்த 6 பேரும், ரயில் , சாலை வழியாக மற்ற மாநிலம் மூலமாக வந்த 34 பேருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இன்று ஒரே நாளில் 1,017 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால் மொத்தமாக கொரோனா தொற்று பாதிக்கபட்ட 28,641 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளதுள்ளனர். இதுவரை மருத்துவமனையில் 23,065 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா இன்று 49 இறப்புகள் அறிவிக்கப்பட்ட நிலையில் மொத்தமாக 625 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
இன்றோடு சேர்த்து 7ஆவது முறையாக ஒரே நாளில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது. 10ஆம் தேதி 1,008பேர், 11ஆம் தேதி 1,372பேர், 12ஆம் தேதி 1,342பேர், 13ஆம் தேதி 1,362பேர்,14ஆம் தேதி 1,138 பேர், 16ஆம் தேதி 1,438 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.