வங்கி சேமிப்பு கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று எஸ்பிஐ வங்கி அறிவித்துள்ளது.
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் கணக்கு வைத்திருப்போர் எப்போதும் குறைந்தபட்ச இருப்புத்தொகை வைத்திருக்க வேண்டும் என்பது கட்டாயமாக இருந்தது. அதை மீறி இருப்பு தொகை குறையும் பட்சத்தில் அதற்கான அபராதமும் விதிக்கப்படும்.
இதனால் எஸ்பிஐ கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் தொடர்ந்து வேதனை தெரிவித்து வந்தனர். மேலும் எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்கள் இதுபோன்ற விதிமுறைகள் காரணமாக வேறொரு வங்கியில் கணக்கை தொடங்கி அதை மெயிண்டெயின் செய்ய ஆரம்பித்து விட்டு ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி கணக்கை சைடு கணக்காக வைத்துக் கொண்டனர்.
இதனை அறிந்த எஸ்பிஐ தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், வங்கியில் குறைந்தபட்ச இருப்புத் தொகை வைத்திருக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை என்று அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு அவர்களது வாடிக்கையாளர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.