Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

சோனு சூட்டின் நற்குணம்…. கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம்…. வைரலாகும் வீடியோ….!!!

ரசிகர்கள் பலர் சோனு சூட்டின் குணத்தை பாராட்டி அவரது கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்துள்ளனர்.

தமிழ் மற்றும் ஹிந்தி மொழிகளில் பல படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் சோனு சூட். இவர் கொரோனா ஊரடங்கு ஆரம்ப கட்டத்தில் இருந்தே அதில் பாதிக்கப்படுபவர்களுக்கு உதவிகளை செய்து வருகிறார். மேலும் சமூக வலைத்தள பக்கத்தில் தன்னிடம் உதவி கேட்கும் அனைவருக்கும் உதவி செய்து வருகிறார்.

இந்நிலையில் நடிகர் சோனு சூட்டின் நற்குணத்தை பாராட்டி ரசிகர்கள் பலர் அவரது கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்துள்ளனர். ஆந்திர மாநிலம் சித்தூரில் தான் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. மேலும் அவர்கள் அங்கு இருக்கும் பொது மக்களுக்கு உணவு வழங்கி நாங்கள் இனிமேல் தொடர்ந்து பொது மக்களுக்கு சேவை செய்ய விரும்புகிறோம். சோனு சூட் தான் எங்களுக்கு இன்ஸ்பிரேஷன் என்று தெரிவித்துள்ளனர்.

https://www.instagram.com/p/CPGNc1uALUC/

Categories

Tech |